இலங்கை – இந்திய இரண்டாவது T20 – முன்னோட்டம் (Preview)

3 years ago
(709 views)

இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது T20 கிரிக்கட் போட்டி சனிக்கிழமை தரம்சாலாவில் நடைபெறவுள்ளது. 


அவுஸ்திரேலியாவுடனான இறுதி T20 போட்டியில் வெற்றிபெற்றமையானது இலங்கை கிரிக்கட் அணிக்கு ஒரு புத்துயிர்ப்பைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் இந்தியாவுக்கு எதிரான முதலாவது போட்டியில் 62 ஓட்டங்களால் பெரும் தோல்வியைச் சந்தித்து, அந்த எதிர்பார்ப்பை முறியடித்துக் கொண்டது. 

இலங்கையின் முக்கிய வீரர்கள் சிலர் கொவிட் மற்றும் காயம் காரணமாக உள்ளடக்கப்படவில்லை.

சுழற்பந்து வீச்சாளர் மஹீஸ் மற்றும் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் ஆகியோர் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 


இந்திய அணியைப் பொறுத்தவரையில் உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் தோல்வியின் பின்னர் செய்துள்ள சில முக்கியமான மாற்றங்கள், இந்தியா சரியான திசையில் பயணிப்பதாகக் கொள்ளப்படுகிறது. 

முக்கியமாக முதல் 3 துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த திறமையை வெளிப்படுத்துகின்றனர். 

விளையாட்டு செய்திகளை ‘மட்டும்’ வட்சப்பில் பெற்றுக் கொள்ள எமது குழுவில் இணையுங்கள்.

மேலும், வெங்கடேஷ் ஐயர் பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் இரண்டிலுமாக சிறப்பாகச் செயற்பட்டு வருகிறார். 


இந்திய அணி இறுதியாக விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருப்பதுடன், இலங்கை அணி கடைசி 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. 


அணி விபரம் 


இந்தியாவின் ரத்து ராஜ் காய்வாட் காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாடி இருக்கவில்லை.

அவர் இன்னும் குணமடையவில்லை என்றால், இன்றைய போட்டியில் மாற்றமில்லாத அதே இந்திய அணியே விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


வீரர்கள் 

1 Rohit Sharma (capt), 2 Ishan Kishan (wk), 3 Shreyas Iyer, 4 Sanju Samson, 5 Deepak Hooda, 6 Venkatesh Iyer, 7 Ravindra Jadeja, 8 Harshal Patel, 9 Bhuvneshwar Kumar, 10 Jasprit Bumrah, 11 Yuzvendra Chahal


இலங்கை அணியைப் பொறுத்தமட்டில், கமில் மிஷாராவுக்கு பதிலாக தனுஷ்க குணதிலக்கவும், தினேஷ் சந்திமாலுக்கு பதிலாக நிரோஷன் டிக்வெல்லவும் விளையாடுவார்கள் என்று அனுமானிக்கப்படுகிறது.
வீரர்கள். 

வீரர்கள்

1 Danushka Gunathilaka, 2 Pathum Nissanka, 3 Charith Asalanka, 4 Janith Liyanage, 5 Niroshan Dickwella (wk), 6 Dasun Shanaka (capt), 7 Chamika Karunaratne, 8 Dushmantha Chameera, 9 Jeffrey Vandersay, 10 Praveen Jayawickrama, 11 Lahiru Kumara


மைதானம் 


இன்றைய போட்டி மழையினால் பாதிக்கப்படக்கூடிய அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

தரம்சாலா ஆடுகளம் முன்கூட்டிய கணிக்க முடியாத மாறுபாடுகளைக் கொண்டதாக இருக்கிறது. 


பதிவு செய்யப்பட வேண்டிய புள்ளிகள்

உலகக் கிண்ண தோல்விக்குப் பின்னர் இந்தியா தொடர்ந்து 10 – 20க்கு20 போட்டிகளில் வென்றுள்ளது. தொடர்ச்சியாக 12 போட்டிகளில் வென்றுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் ரொமேனியா சாதனையை கொண்டுள்ளன.


இலங்கை அணி இந்தியாவில் இந்தியாவுக்கு எதிராக 16 போட்டிகள் விளையாடி 12இல் தோற்றுள்ளன. இலங்கையின் வெற்றி – தோல்வி விகிதம் 0.25 ஆகும். 


இந்தியாவின் சஹால், 67 – 20க்கு20 விக்கட்டுகளை வீழ்த்தி, பும்ராவை (66) கடந்து அதிக 20க்கு20 விக்கட்டுகளை வீழ்த்திய இந்தியராகப் பதிவானார். 

விளையாட்டு செய்திகளை ‘மட்டும்’ வட்சப்பில் பெற்றுக் கொள்ள எமது குழுவில் இணையுங்கள்.


நன்றி – க்ரின்இன்ஃபோ

Show full article

Leave a Reply

Your email address will not be published.