விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீடித்த இந்தியா

2 months ago
Sri Lanka
World
aivarree.com

இந்தியாவில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை செய்வதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.

“ஊபா” சட்டத்தின் கீழ், அதாவது, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் இந்தத் தடை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விடுதலைப்புலிகள் இயக்கத்தை இந்திய மத்திய அரசு தடை செய்தது.

இந்த தடை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்தியத் தேசிய பாதுகாப்புக் கருதி, 1992 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் முதன் முதலில் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது