பாடசாலைகளுக்குள் பாலர் பாடசாலைகளை ஆரம்பிப்பது சாத்தியமற்றது – சுசில் பிரேமஜயந்த

4 days ago
Sri Lanka
aivarree.com

பாடசாலைகளுக்குள் பாலர் பாடசாலைகளை ஆரம்பிப்பது சாத்தியமற்ற விடயமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாலர் பாடசாலை கட்டமைப்பு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலைகளுக்குள் பாலர் பாடசாலைகளை ஆரம்பிப்பது சாத்தியமற்ற விடயமாகும்.

6000 கும் மேற்பட்ட பாடசாலைகளில் 200க்கும் குறைந்த மாணவர்களே கல்வி கற்கின்றனர்.

சுமார் 900 பாடசாலைகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

அதனால் அதனை நடைமுறைமைப் படுத்துவதில் சிக்கல் உள்ளது. பாடசாலைகளில் கட்டடங்களை அதிகரிக்க வேண்டிய தேவையும் ஏற்படலாம்” என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.