குசல், மஹீஷ்க்கு பதிலாக இவர்கள் – சிறிலங்கா கிரிக்கட்

2 years ago
SPORTS
aivarree.com

காயமடைந்த குசல் மெண்டிஸ் மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோருக்கு பதிலாக நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் 20க்கு20 குழாமில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது 20-20 போட்டியின் போது மெண்டிஸ் மற்றும் தீகஷன இருவருக்கும் தொடை தசையில் காயம் ஏற்பட்டது.

மஹீஷ் தீக்ஷன நாடு திரும்பியுள்ளார்.

அதே நேரத்தில் வனிந்து ஹசரங்கவும் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.