கிராம உத்தியோகத்தர்கள் இன்று முதல் சுகயீன விடுமுறை போராட்டம்

4 days ago
Sri Lanka
aivarree.com

நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் இன்று முதல் சுகயீன விடுமுறை போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதற்கமைய நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் சேவையில் இருந்து விலகி செயற்பட்டமையால் பொதுமக்கள் இன்று அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

முன்னதாக கடந்த 6 மற்றும் 7 ஆம் திகதி கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

நாடாளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தினை முன்னெடுத்துள்ளமையினால் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.