சாதாரண தர பெறுபேறு | சற்றுமுன் வந்த அப்டேட்

8 months ago
Sri Lanka
aivarree.com

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியாக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்திருந்தது. 

பரீட்சைகள் திணைக்களமும் இதற்கான உத்தரவாதத்தை வழங்கி இருந்தது. 

ஆனால் அதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவாக இருப்பதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நடைமுறை ரீதியாக நிலவுகின்ற சிரமங்களால் பரீட்சை முடிவுகள் வெளியாவது இன்னும் தாமதிக்கலாம் என்று கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக அய்வரி செய்திகளுக்கு கருத்துரைத்த கல்வி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் இன்னும் ஓரிரு வாரங்களில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட தீவிர முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்தார். 


உடனடி செய்திகளை வட்சப் ஊடாக பெற்றுக்கொள்ள எமது வட்சப் குழுவில் இணையுங்கள்…. 

https://chat.whatsapp.com/LMn23Ym9ANODy3MsiWMFNK