
பல அமைச்சர்கள் அச்சத்தில் | மொட்டு கட்சியில் பெரும் பிளவு | அலசல்
நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்தாடல்களும் அரசியல் அரங்கில் பதிவாகின்றன. உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டியிருந்தாலும், அவை ஒத்திவைக்கப்பட்ட வண்ணமே உள்ளன. மாகாண சபைத் தேர்தல் குறித்த பேச்சே இல்லை. உள்ளூராட்சி தேர்தல் நடைபெறுவதில் நிச்சயமற்ற நிலைமை தொடர்கிறது. இவ்வாறான சூழ்நிலையில் அடுத்தபடியாக ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியவந்தவண்ணம் இருக்கின்றன. இதனை பல்வேறு தரப்பினரும் உறுதிபடுத்தி இருக்கிறார்கள். அண்மையில் […]

மைதானத்தில் யுவதி கொலை | பொலிஸார் வழங்கிய விரிவான அப்டேட்கள்
கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (17) பிற்பகல் பல்கலைக்கழக மாணவியை கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் பல்கலைக்கழக மாணவர் ஒருவரை வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்தனர். மேலதிக விசாரணைகளுக்காக அவர் கறுவாத்தோட்டம் பொலிஸாரிடம் அழைத்து செல்லப்பட்டுள்ளார். கொழும்பு குதிரைப் பந்தய மைதானத்தில் படுகொலை செய்யப்பட்ட யுவதியின் சடலம் இன்று பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டது. யுவதி பல்கலைக்கழக மாணவி என பின்னர் தெரியவந்துள்ளது. அவர் 24 வயதுடையவர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் ஆண்டில் […]

எரிபொருள் விலை அதிகரிக்கலாம் | அமைச்சர் கஞ்சனவை பதவி விலக்க அழுத்தம்
மின் கட்டண அதிகரிப்பு கைவிடப்படும் நிலையில் அமைச்சர் கஞ்சனவை பதவி விலக்க அழுத்தம் மின் கட்டண ஏற்றத்துக்கு மாற்றுச் சூழ்ச்சி பெற்றோலும் டீசலும் 25 ரூபாவால் அதிகரிக்கலாம். இலங்கையில் மின்சார கட்டணத்தை 2000 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கான யோசனை ஒன்று அமைச்சர் கஞ்சன விஜயசேகரவினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அவர் பல்வேறு நியாயங்கள் கற்பிக்கிறார்.ஆனாலும் இந்த கட்டண அதிகரிப்பு சற்றும் நியாயமற்றது என்றும், அது சாதாரண பொதுமக்களால் தாங்கிக் கொள்ள முடியாதது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவரால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கட்டண […]

தினேஷ் ஷாப்டர் கொலை | புதிய கோணத்தில் விசாரணை
ஆதாரங்களை அழித்த கொலையாளி/கள் லொக்கேஷன் ஷெயாரிங் தொடர்பாக சந்தேகம் சந்தேகத்துக்கிடமான 4 இலக்கங்கள் காணாமல் போன உணவுப் பொதிகள் —————-——————-///////—————————-////——————- தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் கொலையில் இன்னும் மர்மம் நீடிக்கிறது. இது தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் உள்ளிட்ட போலீஸ் குழுக்கள் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றன. ஆனால் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்தக் கொலை குழுவொன்றினால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. கொலை நடந்த இடத்தில் எந்த ஆதாரங்களையும் விட்டு வைக்காத அளவுக்குச் […]

தோல்வியின் பின்னர் இந்திய அணியில் மாற்றங்களா?
இந்திய கிரிக்கட் அணிக்கு புதிய தலைவரா? படுதோல்வியின் பின் கொதித்துப் போன இரசிகர்கள் 2011க்குப் பின்னர் இந்தியாவின் நிலை 20க்கு20 கிரிக்கட் உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணி அரையிறுதியுடன் வெளியேறியமையானது, இந்திய கிரிக்கட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்திய அணி அரையிறுதி போட்டியில் இங்கிலாந்துடன் 10 விக்கட் வித்தியாசத்தில் தோல்வியுற்றமையானது, பெரும் விமசர்னத்துக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. 2011ம் ஆண்டுக்குப் பின்னர் இந்திய கிரிக்கட் அணி எந்தவொரு பெரிய தொடர்களிலும் கிண்ணத்தைக் கைப்பற்றவில்லை. இந்த […]

பாராளுமன்றத்தை கலைக்க பிரேரணை? தேக்க நிலைக்கு சென்றது பொருளாதாரம்
இலங்கை தற்போது பொருளாதார தேக்க நிலையில் இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பொருளாதார தேக்கநிலை என்பது பொருளாதார நெருக்கடியை காட்டிலும் மோசமான நிலையாகும். இங்கு பொருளாதார வளர்ச்சி என்பதே இருக்காது. வேலை வாய்ப்பு இன்மை, மக்கள் மத்தியில் அமைதியின்மை என்பன அதிகரிக்கும். மிகப்பெரிய பஞ்ச காலம் ஒன்று உருவாகும் சாத்தியங்கள் கூட இருக்கின்றன. மக்கள் இப்போது சிலவேளை உணவுகளைத் தவிர்த்தே வாழ்கின்றனர். இலங்கை தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என்ற வகையிலான […]

ரணிலுக்கு கைமாறுமா அதிகாரம் – பதவி விலகுகிறாரா ஜனாதிபதி?
நாட்டின் பொருளாதார நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது. தற்போது விலை அதிகரிக்கப்படாத பொருட்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கிறது? இதுதொடர்பாக அரசாங்கத்தின் தரப்பிலும், எதிர்க்கட்சிகள் தரப்பிலும் வெவ்வெறு செய்திகள் வெளியாக்கப்பட்டு வருகின்றன. இப்போதைய சூழ்நிலையில் வெளிநாடுகளிடம் கையேந்துவதைத் தவிர அரசாங்கத்துக்கு வேறு வழியே இல்லை என்றே சொல்லப்படுகிறது. அரசாங்கம் பெருந்தொகையான கடன்களை வாங்கிக் குவித்து வருகிறது. இதற்கு முன்னர் வாங்கிக் குவித்த […]

விமல் வீரவன்சவும் ஆளுங்கட்சியின் நாடகமும்
விமல் வீரவன்சவும் உதய கம்மன்பிலவும் பதவி நீக்கப்பட்டமையும், அதன் பின்னரான அவர்களின் அறிவிப்புகளும் திட்டமிட்ட நாடகங்களே என்றுதான் பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர். நானும் அதே நிலைப்பாட்டோடுதான் இருக்கிறேன்.அதில் மாற்றுக் கருத்தே இல்லை. இதன் முதல் பாகம் ஆனால், அவர்கள் எதற்காக இந்த நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள்? அரசாங்கத்திடம் அவர்கள் கண்டுகொண்ட முக்கியமான விடயம் என்ன? போன்றவற்றை இந்தவாரம் பார்க்கலாம். விமல்வீரவன்ச, தற்போதைய சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வருவதற்கு அதிமுக்கிய பங்களிப்பை மேற்கொண்டவர். நமக்கெல்லாம் தெரியும், இனவாதம் […]

விமல் உதய நாடகமாடுகிறார்களா? – சிக்கலோனின் சிறப்புக் கட்டுரை
விமல் உதய நாடகமாடுகிறார்களா? என்பதுதான் நாட்டு மக்கள் பெரும்பாலானோரது தற்போதைய ஒரே கேள்வியாக இருக்கிறது. அமைச்சர்களாக இருந்து பதவி நீக்கப்பட்ட விமல்வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி, அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கடுமையாக விமர்சித்திருந்தார்கள். முக்கியமாக விமல் வீரவன்ச முன்வைத்திருந்த குற்றச்சாட்டுகள் அமெரிக்கா மீது தாக்கம் செலுத்தும். பசில் – விமல் வீரவன்ச முரண்பாடுகள் பசில் ராஜபக்ஷவுக்கும் விமல் வீரவன்ச உள்ளிட்ட தரப்பினருக்கும் இடையில் நீண்டகாலமாக முரண்பாடுகள் நிலவி வந்துள்ளன என்பது இந்த செய்தியாளர் சந்திப்பில் விமலும் உதயவும் தெரிவித்திருந்த கருத்துக்கள் உறுதி செய்கின்றன. எப்படியாவது ஜனாதிபதியாகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பசில் ராஜபக்ஷ நீண்டகாலமாக அரசியலில் போராடி […]

இலங்கை – இந்திய இரண்டாவது T20 – முன்னோட்டம் (Preview)
இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது T20 கிரிக்கட் போட்டி சனிக்கிழமை தரம்சாலாவில் நடைபெறவுள்ளது. அவுஸ்திரேலியாவுடனான இறுதி T20 போட்டியில் வெற்றிபெற்றமையானது இலங்கை கிரிக்கட் அணிக்கு ஒரு புத்துயிர்ப்பைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இந்தியாவுக்கு எதிரான முதலாவது போட்டியில் 62 ஓட்டங்களால் பெரும் தோல்வியைச் சந்தித்து, அந்த எதிர்பார்ப்பை முறியடித்துக் கொண்டது. இலங்கையின் முக்கிய வீரர்கள் சிலர் கொவிட் மற்றும் காயம் காரணமாக உள்ளடக்கப்படவில்லை. சுழற்பந்து வீச்சாளர் மஹீஸ் மற்றும் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் ஆகியோர் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்திய அணியைப் பொறுத்தவரையில் உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் தோல்வியின் பின்னர் செய்துள்ள சில முக்கியமான மாற்றங்கள், இந்தியா சரியான திசையில் பயணிப்பதாகக் கொள்ளப்படுகிறது. முக்கியமாக முதல் 3 துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த திறமையை வெளிப்படுத்துகின்றனர். விளையாட்டு செய்திகளை ‘மட்டும்’ வட்சப்பில் பெற்றுக் கொள்ள […]

குற்றப் பிரதேசமாக மாறியுள்ள கும்புக்கன் ஓயா – அருள்கார்க்கி
இந்தக்கட்டுரை INTERNEWS இன் EARTH JOURNALISM NETWORK இன் அனுசரணையில் அறிக்கையிடப்பட்டது. இலங்கையின் பிரதான இயற்கை வளமாக நீர்வளம் காணப்படுவதுடன் இது அன்று தொடக்கம் இந் நாட்டின் அபிவிருத்திக்கு அளப்பரிய பங்காற்றும் பிரதான காரணியாகவும் விளங்குகிறது. விவசாய நாடான இலங்கையில் அன்று தொடக்கம் இன்று வரை பல்வேறுபட்ட நீர்ப்பாசன முறைகளூடாகவும் இந்நாட்டின் விவசாய பொருளாதாரத்திற்கு ஆற்றிவரும் பங்களிப்பு அளப்பரியது. இது தவிர கைத்தொழில், சேவை வழங்கல், குடிநீர் தேவை என்பன மட்டுமல்லாது பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கும், சுற்றுலா கைத்தொழிலுக்கும், நீர்மின் உற்பத்திகளுக்கும். இலங்கையின் நீர்வளம் மிகமுக்கிய மூலமாக அமைந்துள்ளது. இலங்கை சுமார் 103 பிரதான […]