பயிற்சி ஆட்டத்தில் இன்று ஆப்கானுடன் மோதும் இலங்கை

8 months ago
SPORTS
aivarree.com

2023 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் எட்டாவது பயிற்சி ஆட்டத்தில் இன்று இலங்கை, ஆப்கானிஸ்தானை எதிர் கொள்ளவுள்ளது.

இந்த போட்டியானது இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.00 மணிக்கு குவாத்தியில் அமைந்துள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகும்.

இலங்கை தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் பங்களாதேஷிடம் மோசமான தோல்வியை சந்தித்தது.

அதேநேரத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் முதல் பயிற்சி ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.

இந் நிலையில் இந்த ஆட்டம் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, திருவானந்தபுரத்தில் இடம்பெறும் ஒன்பதாவது பயிற்சி ஆட்டத்தில் இன்று இந்தியா, நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.

ஹைதராபாத்தில் நடைபெறும் 11 ஆவது பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அவுஸ்திரேலியாவை எதிர்கொள்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.