ரொஷானிடம் ரணில் கேட்ட 2 கேள்விகள் | சஜீத்துடன் இணைந்து சூழ்ச்சி

6 months ago
Sri Lanka
aivarree.com

விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தொடர்பில் அமைச்சரவையில் ஜனாதிபதி கேட்ட இரண்டு கேள்விகளுக்கு ரொஷான் ரணசிங்க சரியான பதிலை வழங்கவில்லை.

அதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரை பதவி நீக்கம் செய்யும் கடிதத்தை கையளித்ததாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிரிக்கட் நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச கிரிக்கட் பேரவையுடன் கலந்துரையாட அமைச்சரவை உபகுழுவை நியமிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ரொஷான் ரணசிங்க, சஜித் பிரேமதாசவின் அலுவலகத்திற்கு சென்று கிரிக்கெட் நெருக்கடிக்கு தீர்வுகாண இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் கலந்துரையாடியது ஏன்?

இரண்டாவது கேள்வியாக, மகாவலி காணி பகிர்வு அமைச்சர் என்ற ரீதியில் தான் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தில் முன்மொழியப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏன் தனது அரசியல் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என ஜனாதிபதி கேள்வி எழுப்பினார். 

அப்பாவி மக்கள் காணிகளை வைத்திருக்கும் போது இவ்வாறு செய்வது பிரச்சினை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த இரண்டு கேள்விகளுக்கும் அமைச்சர் பதிலளிக்காமையால் அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள ஐக்கியத்தை மீறியதை சுட்டிக்காட்டியே, அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கான கடிதத்தை ஜனாதிபதி கையளித்துள்ளார்.

அமைச்சரவை விவாதத்தின் பின்னர் அமைச்சர் ஒருவரை பதவியில் இருந்து நீக்கிய முதல் ஜனாதிபதி என்ற வரலாற்றை இந்த சம்பவம் படைத்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.