மழையால் கை நழுவிய அயர்லாந்தின் வாய்ப்பு | 8 ஆவது அணியாக தகுதி பெற்ற தென்னாப்பிரிக்கா

1 year ago
SPORTS
aivarree.com

இங்கிலாந்தின், செம்ஸ்ஃபோர்டில் செவ்வாய்க்கிழமை (9) நடைபெறவிருந்த அயர்லாந்து மற்றும் பங்களாதேஷ் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டது.

இதனால், 2023 ஐசிசி ஆண்கள் உலகக் கிண்ணத்துக்கு நேரடியாக தகுதி பெறும் அயர்லாந்தின் நம்பிக்கையும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

2023 ஐசிசி ஆண்கள் உலகக் கிண்ணத்துக்கு எட்டு அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன.

நியூசிலாந்திற்கு எதிரான இலங்கையின் தோல்வியுற்ற தொடருக்குப் பின்னர், தென்னாப்பிரிக்கா தனது சொந்த மண்ணில் நெதர்லாந்திற்கு எதிரான இரண்டு வெற்றிகளை அடுத்து 2023 ஐசிசி ஆண்கள் உலகக் கிண்ணத்துக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது.

அதன்படி, இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் 2023 ஐசிசி ஆண்கள் உலகக் கிண்ணத்துக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன.

அதேநேரம் உலகக் கிண்ணத்துக்கான தகுதிகான் போட்டியில் சிம்பாப்வே, நெதர்லாந்து, ஸ்கொட்லாந்து, ஓமான், நேபாளம், இலங்கை, அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும்.

தகுதிச் சுற்றுப் போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் சிம்பாப்வேயில் ஆரம்பமாகவுள்ளன.