இம்ரான் கான் கைதின் எதிரொலி | பாகிஸ்தான் முழுவதும் போராட்டங்கள்

1 year ago
World
aivarree.com

பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே வன்முறை மோதல் வெடித்துள்ளது.

நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து வரும் நிலையில், குவெட்டா நகரில் ஒருவர் மரணித்துள்ளதாக தெரியவருகின்றது.

அமெரிக்காவும் இங்கிலாந்தும் “சட்ட விதியை” கடைப்பிடிக்க அழைப்பு விடுத்துள்ளன.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில் நாடு முழுவதும் மொபைல் இணையத்தள சேவையை நிறுத்தி வைத்துள்ளதாக பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுக்காகத் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள உச்ச நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை ஆஜரான நிலையில் இம்ரான் கான் கைதுசெய்யப்பட்டார்.