பிளாஸ்டிக் பொம்மைகளின் பயன்பாடு குறித்து எச்சரிக்கை

1 year ago
Sri Lanka
aivarree.com

பிளாஸ்டிக் பொம்மை பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்துவதில் இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளது.

பிளாஸ்டிக் பொம்மைகள் சிறுவர்களின் ஆரோக்கியத்திற்கு பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்துவதால் மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிளாஸ்டிக் பொம்மைகள் உற்பத்தி மற்றும் விற்பனையை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய சுற்றாடல் அதிகார சபையில் பல விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த பொம்மைகளில் பிளாஸ்டிக் மட்டுமின்றி கனரக உலோகங்கள் அடங்கிய பல்வேறு வகையான வர்ணங்களும் அடங்கியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் சரோஜனி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் பொம்மைகள் பல்வேறு உடல்நலக் கோளாறுகளை சிறுவர்களுக்கு ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதனால் மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகளை சிறுவர்களுக்கு கொடுப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.