கொழும்பு துறைமுக நகரில் வரியில்லா வாய்ப்புகள்

7 months ago
aivarree.com

கொழும்பு துறைமுக நகருக்குள் வரியில்லா சில்லறை வர்த்தகத்தை மேற்கொள்ள/வரியில்லா வணிக வளாகங்களை நடத்த ஆர்வமுள்ள முதலீட்டாளர்களுக்கான விடயங்களை சுட்டிக்காட்டி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி, வரி இல்லாத சில்லறை வணிகங்களை நடத்த முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய வேண்டும்.

மேலும், முதலீட்டாளர்கள் வரி இல்லாத வணிக வளாகங்களை நடத்துவதற்கு குறைந்தபட்சம் 7 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்ய வேண்டும்.

மேலதிகமாக விளம்பரதாரர் தகுதியுடையவராகக் கருதப்படுவதற்கு, வரியில்லா வர்த்தக நடவடிக்கைகளில் உலகளாவிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.