ஈரானிய இலக்குகள் மீதான அமெரிக்க தாக்குதலை தொடர்ந்து எண்ணெய் விலைகள் அதிகரித்தன

7 months ago
aivarree.com

சிரியாவில் ஈரானிய இலக்குகளுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து எண்ணெய் விலை வெள்ளிக்கிழமை (27) குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டது.

தற்போதைய இஸ்ரேல்-ஹமாஸ் மோதலின் தீவிரத் தன்மை மத்திய கிழக்கில் இருந்து எண்ணெய் விநியோகத்தின் ஸ்திரத்தன்மை பற்றிய கேள்விகளை எழுப்புகிறது.

ஈராக், சிரியாவில் அமெரிக்க இராணும் மீதான சமீபத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை பயன்படுத்தும் கிழக்கு சிரியாவில் உள்ள இலக்கு வசதிகளை அமெரிக்கா தாக்கியது.

இது நேரடியாக எண்ணெய் விநியோகத்தை பாதிக்கவில்லை.

எனினும் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் ஈரான், சவுதி அரேபியா போன்ற பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களை ஈடுபடுத்தும் வகையில் விரிவடையும் என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது.

  • ப்ரெண்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சற்று முன்னர் 1.48% உயர்ந்து, 89.54 அமெரிக்க டொலர்களாக பதிவானது.
  • அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 1.48% உயர்ந்து, 84.54 அமெரிக்க டொலர்களாக பதிவானது.