சீன கப்பலுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள நாரா அனுமதி

7 months ago
Sri Lanka
aivarree.com

சீன கப்பலான ஷி யான் 6 உடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய நீரியல் வளங்கள் ஆய்வு அபிவிருத்தி மற்றும் முகவர் நிறுவனம் (NARA) தெரிவித்துள்ளது.

நேற்று (26) மாலை இந்த அனுமதி வழங்கப்பட்டதாக நாராவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கமல் தென்னகோன் தெரிவித்தார்.

அடுத்த சில நாட்களில் இதற்கான ஆய்வுக் குழுக்கள் அனுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சீன ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 நேற்றுமுன்தினம் (25) கொழும்பு, துறைமுகத்தை வந்தடைந்தது.

ஷி யான் 6 இன் இலங்கை வருகை தொடர்பில் முன்னதாக இந்தியாவும் அமெரிக்காவும் பாதுகாப்பு கவலைகளை எழுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.