IMF உதவி கிடைக்கும் | ஜனாதிபதி ரணில் நம்பிக்கை

1 year ago
Sri Lanka
aivarree.com

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு தராத பொருளாதார சீர்திருத்தங்களை அல்லாமல், 2050 ஆம் ஆண்டுக்கு முகம் கொடுக்கக்கூடிய வலுவான புதிய பொருளாதார முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலாவதியான பொருளாதார முறைமைகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது விடயம் அந்நிய செலாவணியாகும் எனவும் கூறியுள்ளார்.

கொழும்பில் திங்கட்கிழமை (5) நடந்த  வருடாந்த பொருளாதார நிகழ்வான இலங்கை பொருளாதார உச்சி மாநாடில் உரையாற்றிய அவர் தெரிவித்த சில கருத்துகள். 

  • இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு கடனை மறுசீரமைத்து சரியான பொருளாதார முறைமை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். 
  • இந்த நிலைமையை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும். 
  • சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் பணிக்குழு மட்ட உடன்பாட்டை எட்டியுள்ளது.