புதிய அமைச்சர்கள் அடுத்தவாரம்

1 year ago
Gossip
aivarree.com

அடுத்த வாரம் புதிய அமைச்சர்கள் சிலர் பதவி ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சுகாதார அமைச்சராக ராஜித்த சேனாரத்னவும், நீர்வழங்கல் துறை அமைச்சராக ஜீவன் தொண்டமானும் பதவி ஏற்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

அதேநேரம் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட சிலர் இராஜாங்க அமைச்சர்களாக பதவி ஏற்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தற்போது சுகாதார அமைச்சராக இருக்கும் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு வெளிவிவகார அமைச்சு பதவியும், வெளிவிவகார அமைச்சரான அலி சப்ரிக்கு நிதியமைச்சு பதவியும் செல்லும் என கூறப்படுகிறது.