எரிமலை வெடிப்பு காரணமாக ஐஸ்லாந்தில் அவசரகால நிலை பிறப்பிப்பு

2 weeks ago
World
aivarree.com

ஐஸ்லாந்தின் தென் பகுதியிலுள்ள ரெக்ஜேன்ஸ் வளைகுடாவில் காணப்படும் எரிமலை வெடித்துச் சிதறியுள்ளமை காரணமாக அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எரிமலையிலிருந்து வெளியேறும் தீப்பிழம்புகளால் பல்வேறு அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதனை அண்மித்து வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு ஏற்கனவே அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன.

மேலும் ஐஸ்லாந்தின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ப்ளூ லகூன் அபாயகரமான பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.