உலகக் கிண்ண பயிற்சி ஆட்டம் இன்று ஆரம்பம்

8 months ago
SPORTS
aivarree.com

உலகக் கிண்ணத்துக்கு முன்னதான பயிற்சி ஆட்டங்கள் இன்று ஆரம்பமாகின்றன.

இதன் முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

அதன்படி, இந்த ஆட்டம் இன்று (29) பிற்பகல் 2.00 மணிக்கு குவாஹாட்டியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது.

2023 ஐசிசி ஒருநாள் ஆடவர் உலகக் கிண்ணமானது ஒக்டோபர் 05 ஆம் திகதி ஆரம்பமாகிறது.

இந்நிகழ்வில் பங்கெடுக்கும் ஒவ்வாரு அணிகளுக்கும் முன்னோடியாக இரண்டு பயிற்சி ஆட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முதலாவது பயிற்சி ஆட்டத்தில் மோதும் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் அண்மையில் நடைபெற்று முடிந்த 2023 ஆசியக் கிண்ண போட்டியில் இரண்டு முறை சந்தித்தன.

இந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில் இன்றைய பயிற்சி ஆட்டத்தில் இலங்கைக்கு பதிலடி கொடுக்கும் நோக்குடன் பங்களாதேஷ் களமிறங்கும்.