ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் 15 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றல்

2 weeks ago
Sri Lanka
aivarree.com

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் இன்று (02) நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ​​டுபாய் கபில என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் 15 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய இந்த சுற்றிவளைப்பில் 13 கிலோ ஹெரோயின், 6 கிலோ கிராம் ஹாஷ், 500 கிராம் கொக்கெய்ன் மற்றும் 15 இலட்சம் ரூபா கைப்பற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றுடன், பணத்தை வைத்திருந்த சந்தேகநபர் மற்றும் பெண் சந்தேகநபர் ஒருவரும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.