சீமெந்து – 10 ரூபாய் அதிகரிக்க வேண்டிய இடத்தில் 150 ரூபாய் அதிகரிப்பு

4 months ago
aivarree.com

சீமெந்துக்கு 3 சதவீத வரியே அதிகரிக்கப்பட வேண்டும் என்ற போதிலும், சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் அதனைவிட அதிக சதவீதத்தால் அதிகரித்திருப்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

தேசிய கட்டுமான பணியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சுப்புன் அபேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

அவரது கூற்றுக்கு அமைய சீமெந்து ஒரு பொதிக்கு 10 ரூபாயே சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் தெரியவருகிறது.

ஆனால் சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் பொதிக்கு 150 – 350 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெட் வரி 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில், அதனைப் பயன்படுத்தி வியாபாரிகள் தன்னிச்சையாக விலைகளை அதிகரித்துள்ளதாக பரவலாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.