வெளிநாடு செல்லும் பெண்களுக்கு SLBFE இன் முக்கிய அறிவித்தல்

1 year ago
Sri Lanka
aivarree.com

சட்டவிரோதமான முறையில் தொழிலுக்காக நாட்டிலிருந்தும் வெளியேறும் பெண்களை சுரக்ஷா பாதுகாப்பு இல்லங்கள் இனி ஏற்றுக்கொள்ளாது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த முடிவு எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் பணியகம் தெரிவித்துள்ளது.

SLBFE இல் பதிவுசெய்த பின்னர் வெளிநாட்டுத் தொழிலுக்காக இலங்கையை விட்டு வெளியேறும் பெண்களுக்காக வெளிநாட்டுத் தூதரகங்களின் தொழிலாளர் நலப் பிரிவுகளின் கீழ் சுரக்ஷா பாதுகாப்பு இல்லங்கள் நிறுவப்பட்டுள்ளன.

சட்டப்பூர்வமான தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பான வீடுகள் ஏற்படுத்தப்பட்டாலும், இதுவரை பணியகத்தில் பதிவு செய்யாமல் நாட்டை விட்டு வெளியேறும் பெண்களுக்குத் தேவையான நலன்புரி வசதிகளை வழங்க SLBFE செயல்பட்டு வருகிறது.

எவ்வாறெனினும் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் SLBFE இல் பதிவுசெய்த பின்னர் நாட்டை விட்டு வெளியேறும் பெண்களுக்கு மட்டுமே இந்த வசதிகள் இருக்கும் என்று பணியகம் அறிவுறுத்தியுள்ளது.