முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க முடியாதாம் 

1 year ago
Sri Lanka
aivarree.com

குறைக்கப்பட்ட எரிபொருள் விலையின் அளவை அடிப்படையாகக் கொண்டு முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க முடியாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி தொழில் முயற்சியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 60 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதால் முச்சக்கரவண்டி கட்டணத்தை கிலோமீட்டருக்கு 10 ரூபாவால் குறைக்குமாறு சிலர் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அதன் தலைவர் மெரில் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஒரு லீற்றர் பெற்றோலில் முச்சக்கர வண்டியொன்று சுமார் 20 கிலோமீற்றர் பயணிக்க முடியும் எனவும், ஒரு லீற்றர் பெற்றோலில் 60 ரூபாவை குறைப்பதன் மூலம் ஒரு கிலோமீற்றர் கட்டணத்தை 3 ரூபாவினால் குறைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

டயர்களின் விலை அதிகரிப்பு, பராமரிப்புச் செலவுகள் மற்றும் நுகர்வுப் பொருட்களின் விலை உயர்வினால் இந்தத் தொழில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் மக்கள் முச்சக்கரவண்டி பாவனையை மட்டுப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

இந்த காரணங்களால் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க முடியாது என மெரில் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.