வங்கிகளில் ரூபாயின் பெறுமதியில் வீழ்ச்சி

11 months ago
aivarree.com

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (ஜூன் 08) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.

மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் மாறாமல் ரூ. 283.68 ஆக இருப்பதுடன், விற்பனை விகிதம் ரூ. 298.94இல் இருந்து ரூ. 300.47. ஆக அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ.  282.84இல் இருந்து ரூ.  284.82 ஆகவும், விற்பனை விகிதம் ரூ.  297இல் இருந்து ரூ. 299. ஆகவும் அதிகரித்துள்ளன. 

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே ரூ. 285வில் இருந்து ரூ. 287 ஆகவும் ரூ. 297இல் இருந்து ரூ.  299 ஆகவும் அதிகரித்துள்ளன.