தகுதிகான் போட்டிக்காக நாளை சிம்பாப்வே புறப்படும் இலங்கை

11 months ago
SPORTS
aivarree.com

2023 உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுக்காக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நாளை சிம்பாப்வே பயணிக்கவுள்ளனர்.

இந் நிலையில் தகுதிகான் சுற்றில் விளையாடும் அணி விபரத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்னும் உறுதிபடுத்தவில்லை.

எனினும் போட்டியில் விளையாடும் சாத்தியமான 15 பேர் கொண்ட அணி நாளை சிம்பாப்வே நோக்கி பயணிக்கவுள்ளது.

அந்த அணியில் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரரான அஞ்சலோ மேத்யூஸ் நீக்கப்பட்டுள்ளார்.

15 பேர் கொண்ட இலங்கை அணி

  1. தசூன் சானக்க (தலைவர்)
  2. குசல் மெண்டீஸ் (உப தலைவர்)
  3. பத்தும் நிஸ்ஸங்க
  4. திமுத் கருணாரத்ன
  5. சரித அசலங்க
  6. தனஞ்சய டிசில்வா
  7. சந்தீர சமரவிக்ரம
  8. வனிந்து ஹசரங்க
  9. மகேஷ் தீக்ஷன
  10. துஷான் ஹேமந்த
  11. சமிக்க கருணாரத்ன
  12. துஷ்மந்த சமீர
  13. லஹிரு குமார
  14. கசூன் ராஜித
  15. மதீஷ பத்திரன