லாஃப்ஸ் கேஸ் நிறுவனமும் விலையை குறைத்தது

1 year ago
Sri Lanka
aivarree.com

லிட்ரோ கேஸ் நிறுவனம் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையினை குறைத்துள்ள நிலையில் ‘லாஃப்ஸ் கேஸ்’ நிறுவனம் உள்நாட்டுச் சமையல் எரிவாயுவின் விலையினை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் உள்நாட்டு சமையல் எரிவாயுவின் விலையை குறைக்கவுள்ளது.

இதன்படி,

  • 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 1,290 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 3,990 ரூபாவாகும்.
  • 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 516 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 1,596 ரூபாவாகும்.

முன்னதாக லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் சமையல் எரிவாயுவின் விலையை நாளை நள்ளிரவு முதல் அமுக்கு வரும் வகையில் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியமையும் குறிப்பிடத்தக்கது.