CBSL இன் உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதம்

1 year ago
aivarree.com

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் 316.75 ரூபாவாக காணப்பட்ட டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி இன்று 313.37 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது

அதேநேரம் நேற்று 334.20 ரூபாவாக காணப்பட்ட டொலரின் விற்பனை பெறுமதி இன்று 330.50 ரூபாவாக பதிவாகியுள்ளது.

ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.