முன்னாள் சட்டமா அதிபர் கைதுசெய்யப்படுவதை தடுக்கும் இடைக்கால உத்தரவு நீடிப்பு

1 year ago
Sri Lanka
aivarree.com

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டிலிவேராவை கைது செய்து வாக்குமூலம் பதிவு செய்வதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவு 2023 ஜூன் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த இடைக்கால உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான கருத்து தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (டிஐடி) அழைப்பாணை அனுப்பியுள்ளதாக தப்புல டிலிவேர தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் சட்டமா அதிபராக இருந்த காலத்தில் தாம் மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பும் அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை எனத் தெரிவித்த தப்புல டி லிவேரா, இது சட்டமா அதிபர் ஒருவருக்கு வழங்கப்பட்ட சலுகைகளை மீறும் செயலாகும்.

எனவே இந்த விவகாரம் தொடர்பாக அழைப்பாணை அனுப்புவதையும் கைது செய்வதையும் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் மனுவூடாக நீதிமன்றில் கோரியிருந்தார்.