மகளிர் ப்ரீமியர் லீக் | தொடக்க விழாவில் கலக்கவுள்ள பொலிவூட் பிரபலங்கள்

1 year ago
SPORTS
aivarree.com

மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியுடன், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதலாவது பெண்கள் பிரீமியர் லீக் தொடர் இன்று சனிக்கிழமை முதல் டி.ஒய்.பாட்டீல் மைதமானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

அடுத்த 22 நாட்களுக்கு நடைபெறும் இந்த தொடர் மும்பையில் பிரமாண்டமான தொடக்க விழாவுடன் ஆரம்பமாகும்.

பி.சி.சி.ஐ.யின் அண்மைய தகவலுக்கிணங்க, பொலிவூட் பிரபலங்களான நடிகை கிருத்தி சனோன், கியாரா அத்வானி மற்றும் பலர் இந்தத் தொடரின் ஆரம்ப விழாவில் பங்கெடுத்து நிகழ்வுகளை நடத்தவுள்ளனர்.

மேலும் பாடகர்-பாடலாசிரியர் ஏ.பி. தில்லான் தனது சில இசை நிகழ்ச்சிகளையும் மேடையில் நிகழ்த்துவார் என பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர தொடக்க விழா காரணமாக, முதல் போட்டி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

திட்டமிடப்பட்ட தொடக்க ஆட்டம் இன்றிரவு 08.00 மணிக்கு இந்திய நேரப்படி தொடங்கும்.
மொத்தம் 20 லீக் ஆட்டங்களும், இரண்டு பிளேஒஃப் ஆட்டங்களும் 23 நாட்கள் நடைபெறும்.

7 நாடுகளைச் சேர்ந்த 87 மகளிர் கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடரில் விளையாடவுள்ளனர்.

லீக் கட்டத்தின் இறுதி ஆட்டம் மார்ச் 21 அன்று பிரபோர்ன் மைதானத்தில் UP வாரியார்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்.

வெளியேற்றல் போட்டி மார்ச் 24 அன்று டி.ஒய்.பாட்டீல் மைதானத்தல் நடைபெறுவதுடன், இறுதிப் போட்டி மார்ச் 26 அன்று பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும்.