வழமைக்கு மாறான வெள்ளம் | மலேசியாவில் அவலம்

1 year ago
World
aivarree.com

பல நாட்களாக பெய்து வரும் மழையின் விளைவாக ஏற்பட்ட வெள்ளத்தால் சிங்கப்பூர் எல்லையை அண்மித்த மலேசியாவின் தெற்கு ஜோகூர் மாநிலத்தில் கிட்டத்தட்ட 40,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தை எதிர்கொண்டுள்ளனர்.

மேலும் கடந்த வாரத்தில் இந்த அனர்த்தத்தால் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததாக மலேசிய அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்காக 200 க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களை அதிகாரிகள் அமைத்துள்ளதாக அந் நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் – மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட வருடாந்த மழைக்காலத்தில் மலேசியாவில் வெள்ளம் ஏற்படுவது வழக்கம்.

ஆனால் இந்த வாரம் பெய்த கன மழையினால் பல ஜோகூர் குடியிருப்பாளர்கள் தங்குமிடம் தேடி அலையும் அவலம் ஏற்பட்டுள்ளது.