பெரும்பாலான அமைச்சர்களிடம் செயல்திறன் இல்லை | இரகசிய அறிக்கை கசிவு

1 year ago
Sri Lanka
aivarree.com

பெரும்பாலான அமைச்சுக்களில் முன்னேற்றமும் வினைத்திறனும் மிகவும் குறைவாக இருப்பதாக இரகசிய அறிக்கையொன்று வெளிப்படுத்தியுள்ளது.

மக்கள் எதிர்பார்க்கும் அளவு வினைத்திறனாக பொறுப்புகளை அமைச்சுக்கள் நிறைவேற்றவில்லை என்பதையும் அந்த அறிக்கை காட்டியுள்ளது.

சில அமைச்சுக்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக புதிய பிரச்சினைகளை உருவாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த அறிக்கையின்படி, செயல்திறன், வினைத்திறன் மற்றும் முன்னேற்றம் இல்லாத அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் மிக விரைவில் நீக்கப்படுவார்கள் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-லங்காசிநியூஸ்-