பெருந்தோட்ட மக்களுக்கு நிரந்தர முகவரி கேட்டு உச்ச நீதிமன்றில் மனு

1 year ago
Sri Lanka
aivarree.com

பெருந்தோட்ட சமூகத்தில் வசிப்பவர்களுக்கு பதிவு செய்யப்பட்ட நிரந்தர முகவரிகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தோட்டத் தொழிலாளி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளார்.

மாவத்தகம – மூவாங்கந்த தோட்டத்தைச் சேர்ந்த மனுதாரர் ஜீவரத்தினம் சுரேஷ்குமார், இலங்கையில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் தொடர்பாக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.  

இந்த மனுவில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மனுவின்படி, தோட்டத் தொழிலாளர்களுக்கான பதிவு செய்யப்பட்ட நிரந்தர குடியிருப்பு முகவரிகள், இந்த தனிநபர்கள் அரசாங்க சேவைகளை அணுகுவதையும், நாட்டின் ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்க முடியும் என்பதையும் உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இலங்கையின் தேயிலை, இறப்பர் மற்றும் தெங்கு ஆகிய துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களில் கணிசமான பகுதியினரான மனுதாரர் உட்பட இலங்கையின் தோட்ட சமூகத்தினருக்கான பதிவு செய்யப்பட்ட முகவரி மறுக்கப்பட்டதை நிவர்த்தி செய்யும் நோக்கத்திற்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.