தற்போதைய அமைச்சர்களால் புதிய அமைச்சர்களுக்கு தடை

2 years ago
Gossip
aivarree.com

தற்போதுள்ள அமைச்சர்கள் சிலரால், புதிய அமைச்சர்கள் பதவியேற்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது ,

சில அமைச்சர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அமைச்சு பொறுப்புக்களைக் குறைத்து கொள்ள விரும்பாததினாலும், முக்கியமான ஒருவர் உள்நாட்டு அலுவல்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சைக் கோருவதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அமைச்சரவை மாற்றத்தின் போது சில அமைச்சர்களின் விடயதானங்கள் மாற்றப்பட உள்ளன.

விளையாட்டு, கைத்தொழில், நீர் வழங்கல், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், வர்த்தகம், துறைமுகங்கள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வனவிலங்குகள் ஆகிய அமைச்சுகளில் மாற்றம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

ஆனாலும் தற்போதைய அமைச்சரவை அமைச்சர்கள் பலர் தங்களது விடயதானங்களை மட்டுப்படுத்த விரும்பவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.