நெடுந்தீவு படுகொலை | தூதரகத்துக்கு கடிதம் அனுப்பிய பொலிசார்

1 year ago
Sri Lanka
aivarree.com

– யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 53 வயதுடைய இரட்டைப் பிரஜை இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் அவரது மனைவி ஜேர்மன் நாட்டவர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ நேற்று தெரிவித்தார்.

– மேலதிக விசாரணைகளின் ஒரு பகுதியாக சந்தேகநபரின் சமீபத்திய இருப்பிடத்தை சரிபார்க்க பொலிசார் சம்பந்தப்பட்ட தூதரகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அவர் கூறினார். 

– சந்தேகநபர் மே 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

– 70 வயதுக்கு மேற்பட்ட நான்கு பெண்களும், இரு ஆண்களும் கூரிய பொருளால் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

– பாதிக்கப்பட்டவர்களின் தங்க நகைகள் மற்றும் ஏனைய பெறுமதியான பொருட்களை கொள்ளையடிப்பதே இதன் நோக்கம் என பொலிஸார் தெரிவித்தனர்.

– கத்தியை பயன்படுத்தியதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் கூறியதாக கூறப்படுகிறது.  

– சந்தேகநபர் வசமிருந்த தங்கத்துடன் பொலிசார் கத்தியையும் மீட்டுள்ளனர்.  

– தாக்குதலில் உயிர் பிழைத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 100 வயதான பெண்ணும் உயிரிழந்தார்.  

– அவர்களின் இறுதி சடங்குகள் நேற்றும் நேற்று முன் தினமும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் இடம்பெற்றன.