சிறுவர் கடத்தல்கள் | பொலிசார் விடுக்கும் எச்சரிக்கை

12 months ago
Sri Lanka
aivarree.com

சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கடத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான பதிவுகளை பரப்புவது குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என பொலிஸ் துறை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் பொலிஸ் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

  • பல்வேறு நபர்களின் புகைப்படங்கள், ஒடியோக்கள், வீடியோக்களை பயன்படுத்தி பாடசாலை மாணவர்களுக்கு டொஃபி, சொக்லேட் போன்ற உணவுகளை கொடுத்து அவர்களை கடத்த முயற்சிப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • அண்மைய நாட்களாக, சிறுவர்களை கடத்த முயன்ற சம்பவங்கள் குறித்து, பொலிஸ் நிலையங்களில் பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
  • கடத்தல் முயற்சிகள் தொடர்பான பிற முறைப்பாடுகள் குறித்து, சமூக ஊடகங்களில் பரவும் எந்த தகவலும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
  • இதன்மூலம், சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்புபவர்கள் மற்றும் அந்த பிரச்சாரங்களுக்கு ஆதரவான நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
  • இந்த தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பான தகவல் என்றும், சிறுவர்களை கடத்த முயற்சிக்கும் சந்தேக நபர் இருப்பதாகவும் எந்த நேரத்திலும் பொலிஸார் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை.
  • கடந்த காலங்களில் இது தொடர்பாக பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
  • எவ்வித பொறுப்பும் இன்றி வெளியிடப்பட்டு, பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் இவ்வாறான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு தெரிவிக்கின்றனர்.