சிம்பாப்வேயின் அரையிறுதி கனவு தகர்ந்தது

2 years ago
SPORTS
aivarree.com

ஐசிசி 20/20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர் 12 சுற்றில் இறுதிக்கட்டப் போட்டிகள் இடம்பெற்று வருகின்றன.

சிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் நெதர்லாந்து 5 விக்கட்டுகளால் வென்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய சிம்பாப்வே 117 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளை இழந்தது.

பதிலளித்தாடிய நெதர்லாந்து அணி, 18 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இதன்படி சிம்பாப்வே அணிக்கு அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறுவதற்கு இருந்த வாய்ப்பு அற்றுப்போனது.