சர்ச்சைக்குரிய அவதூறு வழக்கில் ராகுலுக்கு பிணை

1 year ago
World
aivarree.com

சர்ச்சைக்குரிய அவதூறு வழக்கில் இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை இந்திய நீதிமன்றம் திங்கட்கிழமை இடைநிறுத்தி அவருக்கு பிணை வழங்கியது.

கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அண்மையில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந் நிலையில் நீதிமன்றின் இந்த உத்தரவுக்கு எதிராக ராகுல் காந்தி இன்று திங்கட்கிழமை தாக்கல் செய்த மேன்முறையீட்டின் அடிப்படையிலேயே, அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்டுள்ள பிணை மூலம் அவதூறு வழக்கு மீதான மேல்முறையீடுகள் முடியும் வரை ராகுல் காந்தி கைது செய்யப்படாமல் சுதந்திரமாக இருப்பார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபா எம்.பி. பதவியிலிருந்து மார்ச் 23 முதல் அமுலாகும் வகையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.