கூடுதல் பொறுப்புகளுடன் அமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின் | நடிப்புக்கும் முற்றுப்புள்ளி

1 year ago
World
aivarree.com

தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். (விளையாட்டுத்துறை அமைச்சர்)

இன்று காலை 9.30 அளவில் கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். 

அதனை தொடர்ந்து, தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களின் விடயதானங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 

பதவியேற்றதன் பின்னர் உரையாற்றிய ஸ்டாலின், திரைப்படங்களில் இனிமேல் நடிக்க மாட்டேன் என்றும், தன் மீதான விமர்சனங்களுக்கு செயல்கள் மூலம் பதிலளிப்பேன் என்றும் தெரிவித்தார்.