அமைச்சரவைக்கு விளக்கம் தரவுள்ள ஜனாதிபதி ரணில்

1 year ago
Sri Lanka
aivarree.com

நல்லிணக்க முயற்சிகளுக்கான சர்வகட்சி கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்றிருந்தது. 

ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகள் இதில் கலந்துகொண்டன. 

இதன்போது மேற்கொள்ளப்பட்டத் தீர்மானங்கள் தொடர்பாக ஜனாதிபதி ரணில், அடுத்த ஆண்டு ஃபெப்ரவரி மாதம் அமைச்சரவைக்கு விளக்கமளிக்கவுள்ளார். 

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.