16 வயது சிறுமியின் மர்ம மரணம் | இதுவரையில் கிடைத்த முழுமையான விபரம்

1 year ago
Sri Lanka
aivarree.com

களுத்துறையில் 16 வயதான சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பாக இதுவரையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதான சந்தேக நபரான களுத்துறை – இசுறு உயன பகுதியைச் சேர்ந்த 29 வயதான தனுஸ்க கயான் சஹபந்து என்பவரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய களுத்துறை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழங்கிய தகவல்கள் அய்வரி வாசகர்களுக்காக சுருக்கமாக தொகுக்கப்பட்டுள்ளன.

  • கடந்த சனிக்கிழமை களுத்துறையில் உள்ள பிரபல ஹொட்டல் ஒன்றில் இரண்டு அறைகளை பதிவு செய்து நான்கு பேர் அங்கு தங்கியுள்ளனர்.
  • மரணித்த 16 வயதான சிறுமியும், பிரதான சந்தேகநபரும், ஒரு ஆண் மற்றும் இன்னமொரு பெண்ணுமாக நான்கு பேர் அந்த ஹொட்டல் அறைகளில் இருந்தனர்.
  • அவர்கள் இரண்டு அறைகைளை பதிவு செய்திருந்தாலும், ஒரே அறையில் அவர்கள் மது அருந்தினர்.
  • பின்னர் இரண்டு (ஆணும், பெண்ணும்) பேர் அங்கிருந்து வெளியேறினர்.
  • 20 நிமிடங்களின் பின்னர் பிரதான சந்தேநபர் அறையில் இருந்து வெளியில் வந்தார்.
  • அவர் அங்கிருந்து வெளியேறிச் சென்ற ஆணுக்கு தொலைப்பேசி அழைப்பை ஏற்படுத்தி, குறித்த சிறுமி ஆடைகளை கலைந்துவிட்டு ஜன்னல் வழியாக குதித்துவிட்டதாக கூறியுள்ளார்.
  • பின்னர் அவரும் அங்கிருந்து பதட்டத்துடன் வெளியேறியதை ஹொட்டலில் இருந்தவர்கள் பார்த்துள்ளனர்.
  • சில நிமிடங்களில் முன்னதாக ஹொட்டலில் இருந்து வெளியேறி இருந்த ஜோடி, ரயில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்த சிறுமியை பார்த்துவிடடு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
  • ஹொட்டல் இருந்தவர்களுக்கு மூன்றாம் நபர் ஒருவர் சிறுமியின் சடலம் குறித்த தகவலை வழங்கியுள்ளார்.
  • பின்னர் குறித்த ஆண் பெண் ஜோடி பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
  • பிரதான சந்தேநபர் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லும் எண்ணத்தில் நண்பர் ஒருவரின் இல்லத்தில் தலைமறைவாக இருந்தார்.
  • அங்கிருந்த ஒருவர் தகவல் வழங்கியதன் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டார்.
  • பிரதான சந்தேக நபரின் வாக்குமூலத்தின்படி, அவர் டிக்டொக் மூலமாகத்தான் சிறுமியை அறிந்திருந்தார்.
  • இதற்கு முன்னர் அவர் அந்த சிறுமியை நேரில் சந்தித்ததில்லை என்றும், ஒரு முறை சந்தித்திருப்பதாகவும் முரணான பதிலை வழங்கியதாக கூறப்படுகிறது.
  • ஜோடி வெளியேறியதன் பின்னர் தாமும் அந்த சிறுமியும் அங்கு நடனமாடி, மகிழ்ந்திருந்ததாகவும், அப்போது அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், இதனை அடுத்து பதட்டப்பட்ட சிறுமி கதிரை ஒன்றில் ஏறி அங்கிருந்து குதித்ததாகவும் பிரதான சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
  • தொலைப்பேசியில் யாரோ அந்த சிறுமியை மிரட்டியதாக தாம் உணர்ந்து கொண்டதாக பிரதான சந்தேகநபர் கூறுகிறார்.
  • அந்த சமயத்தில் தாம் கதிரையில் அமர்ந்திருந்ததாவும் அந்தப் பெண்ணை தடுக்க முடியவில்லை என்றும் அவர் வாக்குமூலத்தில் பதிவு செய்துள்ளார்.
  • சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேகநபர், அவருடன் தங்கி இருந்த ஜோடி மற்றும் அவர்களை வாகனத்தில் அழைத்து வந்த வாகன சாரதி ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர், காலிமுகத்திடல் புரட்சி போராட்டத்தின் களுத்துறை மாவட்ட பிரதானி என்று பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபே குணவர்தன தெரிவித்துள்ளார்.