கட்டண குறைப்பு செய்தி

1 year ago
aivarree.com

கொள்கலன் பாரவூர்திகளுக்கான கட்டணம் இன்று நள்ளிரவுடன் குறைக்கப்படவுள்ளது.

கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று நள்ளிரவுடன் கொள்கலன்களுக்கான போக்குவரத்து கட்டணங்கள் 2.5 சதவீதத்தால் குறைக்கப்படும்.

இதனை அடுத்து துறைமுகங்களில் இருந்து நகர்த்தப்படும் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் சாத்தியங்கள் இருக்கின்றன.