2023இல் இலங்கை பொருளாதாரம் | மத்திய வங்கியின் அப்டேட்

1 year ago
aivarree.com

இந்த ஆண்டின் இலங்கையின் பொருளாதார கணிப்பீடுகள் தொடர்பான அறிக்கை ஒன்றை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. 

இதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான சில விடயங்கள்.

  • கடன் தருனர்களுடனான சிறப்பான ஊடாடல்கள் காரணமாக, 2023இன் ஆரம்பத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இலங்கைக்கு கிடைக்கும். 
  • பணவீக்கம் இந்த ஆண்டின் முதலாம் காலாண்டில் குறைவடைய ஆரம்பித்து, வருட இறுதிக்குள் எதிர்ப்பார்த்த அளவுக்கு வீழ்ச்சியடையும். 
  • இந்த ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் -8% ஆக வீழ்ச்சியடையும் என 2022இல் கணிக்கப்பட்டிருந்தாலும், இரண்டாம் காலாண்டில் அது மீளும் என கணிப்பிடப்படுகிறது. 
  • பொருளாதார மீட்சிக்காக இலங்கை அமுலாக்கிய கொள்கைகளில் இலங்கை மத்திய வங்கி உறுதியாக உள்ளது. 
  • அதேநேரம் நாட்டின் முன்னேற்றங்களை உன்னிப்பாக அவதானித்து தக்க சமயங்களில் சரியான தீர்மானம் / கொள்கைகள் அமுலாக்கப்படும். 
  • பொருளாதார நெருக்கடி கூட்டு செயற்பாடுகளின் ஊடாக தீர்க்கப்படும் வரையில், நிலைமைகள் தொடர்பாக கூர்மையான அவதான அவசியமாகும்.