உலக சந்தையில் மசகெண்ணெய் விலையில் திடீர் அதிகரிப்பு

1 year ago
aivarree.com

உலக சந்தையில் மசகெண்ணெய் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

டபிள்யு.டீ.ஐ. மசகெண்ணெய் விலை பீப்பாய்க்கு 3.38 டொலர்களால் அதிகரித்து, 79.05 டொலர்களாக பதிவாகியுள்ளது.


ப்ரெண்ட் வகை மசகெண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 3.66 டொலர்கள் அதிகரித்து 83.55 டொலர்களாக பதிவாகியுள்ளது.

கடந்த நாட்களில் உலக சந்தையில் மசகெண்ணெய் விலை கணிசமாக குறைவடைந்து வந்தது.

எனினும் ஒபெக் நாடுகள் மசகெண்ணெய் உற்பத்தியை குறைக்கவிருப்பதாக அறிவித்ததன் காரணமாக தற்போது அவற்றின் விலை அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.