இலங்கை மீள சீனா உதவ வேண்டும் | மனோ கணேசன் கோரிக்கை

1 year ago
Sri Lanka
aivarree.com

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நல்லுறவை கருதி, இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள சீனா உதவ வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோகணேசன் சீனாவிடம் கோரியுள்ளார்.

இந்தியா மற்றும் பாரிஸ் க்ளப் என்பன இலங்கைக்கு கடன் மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பதைப் போல, சீனாவும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

த மோர்னிங் பத்திரிகைக்கு அவர் தெரிவித்த கருத்துகள் சில:-

கடன் சுமை முதன்மையாக இலங்கைக்கு உரியது.

ஆனால் இந்தியாவும் பாரிஸ் கிளப்பும் முதன்மைத் தொகையை குறைக்க தயாராக உள்ளன.

இலங்கைக்கு மேலும் கடன் கொடுத்துள்ளன.

அவர்கள் வட்டி விகிதங்களைக் குறைக்கவும், நீண்ட காலத்திற்கு திருப்பிச் செலுத்துவதை மறுபரிசீலனை செய்யவும் தயாராக உள்ளனர்.

இலங்கைக்கு கடனாக வழங்கிய ஒவ்வொரு அமெரிக்க டொலரையும் மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என சீனா நினைக்கிறது.

சீனர்களோ சலுகைக்காலம் பற்றி பேசுகிறார்கள்.

இது 2022 இல் அறிவிக்கப்பட்டது.

இரண்டு வருட கால அவகாசம் என்றார்கள்.

ஏற்கனவே ஒரு வருடம் கடந்துவிட்டது.

முதன்மைக் கடன் தொகைகளைக் குறைக்கவும், வட்டி விகிதங்களைக் குறைக்கவும் சீனா தயாராக இல்லை.