தனுஷ்க குணதிலக | கட்டுப்பாடுகள் அவுஸ்திரேலிய நீதிமன்றால் நீக்கம்

1 year ago
SPORTS
aivarree.com

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்தவும் மீண்டும் இரவில் வெளியே நடமாடவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

31 வயதான குணதிலக வியாழன் அன்று சிட்னியின் டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றத்தில் தனது பிணை நிபந்தனைகளை மாற்ற விண்ணப்பித்தார்.

அவர் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகளின் கீழ் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

2022 நவம்பரில் நீதிமன்றால் பிணை வழங்கப்பட்டபோது, குணதிலக டிண்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டார்.

வியாழன் அன்று அவரது பிணை நிபந்தனையை மாற்றுவதற்கு அரச அதிகாரி ஒப்புக்கொண்டார்.

இதனால் அவர் மீண்டும் வட்ஸ்அப்பைப் பயன்படுத்த முடியும்.

ஆனால் “டேட்டிங் நோக்கங்களுக்காக இதனை பயன்படுத்தப்படக்கூடாது,” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

அதேநேரம் தனுஷ்க இரவு நேரங்களில் வெளியில் நடமாட விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட்டுள்ளது.

குணதிலக பிணை நிபந்தனைகளை மீறினால், விசாரணைக்காக அல்லது தண்டனைக்காகக் பல மாதங்கள் காவலில் இருக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அவரது வழக்கு ஏப்ரல் மாதம் மீண்டும் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(AAP)