இலங்கை கடன் பிரச்சினைக்குத் தீர்வு | பாரிஸ் க்ளப் முன்மொழிவு

1 year ago
aivarree.com

இலங்கையின் கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான சூத்திரம் ஒன்றை, கடன் வழங்கு நாடுகளின் அமைப்பான பாரிஸ் க்ளப் முன்மொழிந்துள்ளது.


இதன்படி இலங்கையின் கடன் தீர்ப்பனவுக்காக 10 ஆண்டுகள் அவகாச காலம் முன்மொழியப்பட்டுள்ளது.


மேலும் 15 ஆண்டுகளுக்கான கடன் மறுசீரமைப்பு சூத்திரம் ஒன்றையும் பரிந்துரை செய்துள்ளது.


இந்த முறைமையின் அடிப்படையில் இலங்கையின் கடன் பிரச்சினை தற்காலிகமாகத் தீர்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.


ஆனால் இந்தியா, சீனா போன்ற நாடுகள் தாங்கள் வழங்கியுள்ள கடன்களுக்கான மறுசீரமைப்பு திட்டம் எதனையும் இன்னும் முன்மொழியாதுள்ளன.