இலங்கையின் முன்னணி சிங்கள நடிகர் கலன்சூரிய காலமானார்

1 year ago
Sri Lanka
aivarree.com

இலங்கையின் முன்னணி நடிகர் அமரசிறி கலன்சூரிய தனது 82 ஆவது வயதில் காலமானார்.

இந்த தகவலை அவரது குடும்ப வட்டாரங்கள் அறிவித்துள்ளன.

1940 செப்டம்பர் 20 ஆம் திகதி பிறந்த கலன்சூரிய இலங்கை சினிமா, நாடகம் மற்றும் தொலைக்காட்சியில் புகழ்பெற்ற நடிகராக இருந்தார்.

கலன்சூரிய தனது முதல் திரைப்படத்தில் விஜய குமாரதுங்கவுடன் ‘ஹந்தானா கதாவ’ திரைப்படத்தில் இணைந்து நடித்தார்.

கலன்சூரியவுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.