இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கமும், டொலர் பெறுமதி அதிகரிப்பும்

11 months ago
aivarree.com

பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை ரூபாவிற்கு எதிராக அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று (12) காலை வெளியிட்ட உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 290.06 ரூபாவாக அதிகரித்துள்ளது, விற்பனை விலை 303.73 ரூபாவாக அதிகரித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை மத்திய வங்கியின் தினசரி நாணய மாற்று விபர அறிக்கையின்படி, டொலரின் கொள்வனவு விலை 288.08 ரூபாவாகவும், விற்பனை விலை 301.12 ரூபாவாகவும் பதிவானமை குறிப்பிடத்தக்கது.