2023 ஆசியக் கிண்ண போட்டிகள் இலங்கை, பாகிஸ்தானில்?

11 months ago
SPORTS
aivarree.com

2023 ஆசியக் கிண்ணத்துக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தினால் முன்மொழியப்பட்ட கலப்பின போட்டி மாதிரியானது ஆசிய கிரிக்கெட் பேரவையினால் (ஏசிசி) அங்கீகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக ESPNcricinfo செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையை நடுநிலையான இடமாக மாற்றி இந்தியா தனது போட்டிகளை விளையாடலாம்.

அதன்படி, இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் அனைத்து ஆட்டங்களும் இலங்கையில் நடைபெறும், இந்தியா இறுதிப் போட்டிக்கு நுழைந்தால் இறுதிப் போட்டியும் இலங்கையில் நடைபெறும்.

எவ்வாறெனினும் வார இறுதிக்குப் பிறகு இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் ESPNcricinfo தெரிவித்துள்ளது.

தற்போது 2023 செப்டம்பர் 1 முதல் 17 வரை போட்டிகளுக்கான காலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியா பங்கெடுக்காத அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தானில் நடைபெறும்.

இந்த எதிர்பார்ப்பானது நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டு வந்த ஐ.சி.சி.யின் ஒரு பெரிய தொடரின் முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது.

இந்தியாவும் பாகிஸ்தானும் எதிர் எதிர் நாடுகளுக்குச் செல்ல விரும்பாததால், கலப்பின மாதிரி போட்டித் தொடர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தினால் ஒரு தீர்வாக முன்மொழியப்பட்டது.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய இந்தியா மறுத்ததால், ஹோஸ்டிங் உரிமையை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் இந்த முன்மொழிவினை பாகிஸ்தான் முன்வைத்துள்ளது.

2023 உலகக் கிண்ண ஆயத்தமாக 50 ஓவர் வடிவ ஆசியக் கிண்ணத் தொடரில் ஆறு நாடுகள் பங்கேற்கும்.

இறுதிப் போட்டி உட்பட மொத்தம் 13 போட்டிகள் 13 நாட்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.