இணையத்தளம் மூலம் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யும் வசதி

11 months ago
Sri Lanka
aivarree.com

தேர்தல் ஆணையகத்தின் இணையத்தளம் மூலம் 2023 வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

www.elections.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று அதனை மேற்கொள்ள முடியும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி இந்த நாட்களில் நடைபெற்று வருவதுடன், அதற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆவணங்கள் கிராம அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

உரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவங்களை முறையாக பூர்த்தி செய்வதற்கு அனைத்து வாக்காளர்களும் உதவுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொள்கிறது.

திருத்தப் பணிகள் வரும் 16ம் திகதியுடன் முடிவடைய உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.